கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிகழாண்டு ஜமாபந்தி கடந்த 25-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தா.மஞ்சுளா தலைமை வகித்தார்.
இதில், கிராம நிர்வாக அலுவலர்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு, பொதுமக்கள் இணையதளம் வழியாக அனுப்பியிருந்த 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. 100 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணை, 12 பேருக்கு பட்டா மாறுதல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் நேற்று பங்கேற்று, உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார். இதில், கும்பகோணம் வட்டாட்சியர் டி.கண்ணன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.