காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட பரிசோதனை முடிவுகளில் 171 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 7,871 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,448 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,216 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதுவரை காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 105 பேர் உயிரிழந்துள்ளனர்.