எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களுக்கு - அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க பொதுக்குழுவில் தீர்மானம் :

By செய்திப்பிரிவு

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் அமல்ராஜ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகனா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில பொதுச்செயலாளர் சேரலாதன், கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில பொருளாளர் ரமேஷ், மாநில துணைத் தலைவர் ஜெகஜோதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

கூட்டத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் என்ஏசிபி-வி திட்டத்தின் கீழ் ஊதிய உயர் வை உடனடியாக அமல்படுத்த வேண்டும். திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களின் அப்ரைசல் முறையை கைவிட வேண்டும். திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஊழியர்களை வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைக்க வேண்டும். ஊழியர்களுக்கு குழு காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ளபடி கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த திட்ட ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சங்கத்தின் மாநில மையத்தின் வழிகாட்டுதலின்படி, உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்குவது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் அனைவரும் உறுப்பினர்களாக சேர்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்