Regional03

காவிரியில் நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரிப்பு :

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் பெய்த மழை எதிரொலியாக நேற்று நீர்வரத்து விநாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்தது.

ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன் தினம் விநாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், தமிழகத்தை நோக்கி ஓடிவரும் காவிரியாறு அமைந்துள்ள வனப்பகுதியிலும் மழை பெய்தது. மழைநீர் காவிரியாற்றில் சேர்ந்ததால் நேற்று ஒகேனக் கலில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

SCROLL FOR NEXT