Regional03

கோயிலில் வழிபட தடை விதிப்பு - பழநி மலைக்கோயிலுக்குச் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தம் :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரம் காரணமாக கோயில்களில் பக்தர்கள் வழிபடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பழநி மலைக் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை.

அதேநேரம், ஆகம விதிகளின்படி பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன.

நேற்று சித்ரா பவுர்ணமி என்பதால் பழநிக்கு வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். மலைக்கோயிலுக்குச் செல்ல முயன்ற பக்தர்களை அடிவாரம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கோயில் பணியாளர்கள், போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து பழநி மலைக் கோயில் அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோயில் முன் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு ஊர்களுக்கு புறப்பட்டனர்.

SCROLL FOR NEXT