தருமபுரி மாவட்ட காவல்துறையில் பணியாற்றுவோரின் குழந்தைகள் 19 பேருக்கு காவல் கண் காணிப்பாளர் கல்வி உதவித் தொகைகளை வழங்கினார்.
காவலர்களின் குழந்தை களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. காவலர் சேம நல நிதியில் இருந்து பெறப்பட்டு இந்த உதவி வழங்கப்படுகிறது. அந்த வரிசையில், 2019-20-ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையை நேற்று வழங்கப்படுகிறது. காவலர்களின் குழந்தைகள் 19 பேர் நேற்று காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரிடம் இருந்து தொகையை காசோலையாகப் பெற்றனர். மொத்தம் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்துக்கான காசோலைகள் உரியவர்களிடம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பி-க்கள் அண்ணா மலை, புஷ்பராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.