Regional03

தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது :

செய்திப்பிரிவு

கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் வசந்தகுமார் (21). சாக்கு தைக்கும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு திலகர் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது இவரை வழிமறித்த 3 பேர் இவரிடமிருந்த செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ரூ.3,600ஐ பறித்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் போஸ்குமாரை (21) போலீஸார் கைது செய்தனர். சாஸ்திரி நகரைச் சேர்ந்த கற்பகராஜ், காந்தி நகரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா ஆகிய 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT