Regional03

மூதாட்டி கொலை: தொழிலாளி கைது :

செய்திப்பிரிவு

கோவை துடியலூர் அருகேயுள்ள பன்னிமடையை அடுத்த பெரியகடையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (70). கடந்த 16-ம் தேதி, மூதாட்டியின் மகள் தன் தாய்க்கு செல்போன் மூலம் அழைத்தபோது மறுமுனையில் ஆண் நபர் பேசியுள்ளார். மீண்டும் அவர் முயற்சித்தபோது, செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

தாய் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, முத்துலட்சுமி உயிரிழந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையைக் காணவில்லை. தகவல் அறிந்த தடாகம் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், புதுக் கோட்டை மாவட்டம் சீவகம்பட்டியைச் சேர்ந்த வினோத் என்றகருப்பையா (25) என்பவர் முத்துலட்சுமியை கொலை செய்ததும், இவர், அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கி, கட்டிட வேலைக்குச் சென்று வந்ததும் தெரியவந்தது. அவரை தடாகம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT