Regional03

கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

தருமபுரி பிடமனேரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மனோஜ் குமார் (17). இவர் தருமபுரியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று இவர் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றார்.

கிணற்றில் குளித்துக் கொண்டி ருந்தபோது எதிர்பாராத விதமாக மனோஜ்குமார் நீரில் மூழ்கினார். உடனிருந்த அவரது நண்பர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் நீரில் மூழ்கிய மனோஜ் குமாரை மீட்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.

தகவல் அறிந்து அங்கு சென்ற தருமபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் கிணற்றில் சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பின்னர் மனோஜ்குமாரின் உடலை மீட்டனர். இதுதொடர்பாக தருமபுரி நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT