உணவின்றி தவித்தவருக்கு உணவு வழங்கிய போலீஸ்காரர் :

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்லில் ஊரடங்கின்போது சாலையோர ஆதரவற்ற முதியவருக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உணவு வழங்கினார். இதேபோல் தன்னார்வலர்களும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கினர்.

திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானா பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அப்பகுதியில் பசியால் வாடிய ஆதரவற்ற முதியவர் ஒருவரைப் பார்த்தார். இரவு 10 மணியை நெருங்கியதால் அப்பகுதியில் கடைகளை அடைக்கும் முன்பு சப்-இன்ஸ்பெக்டர் உணவு வாங்கி வந்து முதியவருக்கு வழங்கி சாப்பிடவைத்தார்.

இதற்காக அவ்வழியே சென்ற மக்கள் போலீஸ்காரரின் மனிதநேயத்தைப் பாராட்டினர்.

பாரதம் அமைப்பு சார்பில் திண்டுக்கல் நாகல் நகர் உட்பட சாலையோரம், பாலங்களுக்கு அடியில் ஆதரவின்றி தங்கியுள்ளவர்களுக்கு நேற்று உணவு, குடிநீர் வழங்கினர். இந்த சேவையை முழு ஊரடங்கு அமல்படுத்தும் நாட்களில் தொடர்ந்து செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்