ஓசூர் அருகே சானமாவு ஊராட்சிக்கு உட்பட்ட டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் ரூ.4.25 கோடி மதிப்பில் ஏரிக்கரையை பலப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்கும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.
டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரிக்கரைக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். ஏரிக்கரையை ஒட்டிச் செல்லும் தார் சாலையை அகலப்படுத்தி புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.4.25 கோடி மதிப்பில் டி.கொத்தப்பள்ளி ஏரிக்கரையில் தடுப்புச் சுவர் மற்றும் தார்சாலை விரிவாக்க பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சானமாவு ஊராட்சி தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். இதில் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் இளங்கோ உட்பட கிராம பிரமுகர்கள் கலந்து கொண்டு ஏரிக்கரை தடுப்புச் சுவர் மற்றும் தார் சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்கி வைத்தனர்.