வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட தூய்மைப் பணியாளர்கள். 
Regional03

மலேரியா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு :

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் தூய்மைப் பணியாளர்கள் நேற்று மலேரியா ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு குமரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மலேரியா ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் திரளான தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT