திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள சாட்டுப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகள் மது (2). வீட்டின் அருகே விளையாடி விட்டு வீட்டுக்கு வந்த மது, தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை குடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது வழியிலேயே மது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.