ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - ஒரே நாளில் 722 பேருக்கு கரோனா தொற்று : கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்பு பணிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 722 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் யாஸ்மீனுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

கரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமெடுத்துள்ளது. இதை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 722 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநரான யாஸ்மீன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், நோய் தொற்று உறுதி செய்யப் பட்டதால் அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதேபோல, வேலூர் மாநக ராட்சி பகுதியில் 200-க்கும் மேற் பட்டோர் கரேனா தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். மேலும், ஊசூர், ஒடுக்கத்தூர், அத்திக் குப்பம், வடுகன்தாங்கல், கரசமங் கலம், பென்னாத்தூர், அணைக் கட்டு, லாலாபேட்டை, பேரணாம் பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் கரோனாதொற்றால் நிறைய பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவ தும் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,100-ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, தனியார்மருத்துவமனை, விஐடி பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை முகாம் ஆகிய வைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,249- ஆக உயர்ந்துள்ளது.அரசு மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 884 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 284-ஆக உயர்ந்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அங்கு தடுப்புகள் அமைத்து, பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாத வகை யில் கண்காணிப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. கரோனா நோயாளி களுடன் நேரடியாக தொடர்பில் இருந்த 4,386 நபர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு அவர்கள்வீடுகளிலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இதுவரை 5.48 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனா தொற்று வேகமாகபரவி வந்தாலும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்த 97 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். அதேநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உயிரி ழப்பு எண்ணிக்கை 135-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சம்பவம் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இதுவரை 51 ஆயிரம் பேருக்கு செலுத்தப் பட்டுள்ளது என்றும், கரோனாபரவலை கட்டுக்குள் கொண்டு வரதேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 285 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,846-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்