Regional03

விருதுநகர் அதிமுக மகளிர் அணியினர் : 55 பேர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதைக் கண்டித்து விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அதிமுக மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தி மாரியப்பன் மற்றும் 54 பெண்கள் மீது விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT