விவசாயக் களத்தில் துவரைக் கதிர் அடித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். 
Regional03

விவசாய களத்தில் துவரை கதிர் அடித்து - விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் :

செய்திப்பிரிவு

விவசாயக் களத்தில் துவரைக் கதிர்களை அடித்து விவசாயி களிடம் அமைச்சர் ஆர்.பி. உதய குமார் வாக்குச் சேகரித்தார்.

திருமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 2-வது முறை யாகப் போட்டியிடுகிறார்.

இவர் திருமங்கலம் தொகு திக்குட்பட்ட சோலைப்பட்டி, அம்மாபட்டி, கீழக்காடனேரி, குமாரபுரம், சாலிச்சந்தை, சொக் கம்பட்டி, பொன்னையாபுரம் உட் பட பல்வேறு பகுதிகளில் நேற்று வாக்குச் சேகரித்தார்.

சோலைப்பட்டி கிராமத்தில் அறுவடை செய்த துவரைக் கதிர் களை விவசாயிகள் அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் ஆதரவு திரட்டிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விவசாயிகளுடன் சேர்ந்து அவரும் கதிர் அடித்தார். இதைப் பார்த்த விவசாயிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT