திண்டுக்கல் மாவட்டம், சாணார் பட்டியில் அக்னிச் சிறகுகள் சமூக சேவை மற்றும் இலவச பயிற்சி மைய 4-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
அக்னிச்சிறகுகள் மைய நிறு வனர் முருகானந்தம் தலைமை வகித்தார். மைய அறங்காவலர் நாகராஜன் வரவேற்றார். ஆசிரியர் சமய பாண்டியன், சேவை மைய ஆசிரியர் பாலசுப் பிரமணியன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
ஓவியம், பேச்சுப்போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நிர்வாக அறங்காவலர் முத்து லெட்சுமி பரிசு மற்றும் மரக்கன்று வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக ஜெம் லயன்ஸ் சங்கத் தலைவர் வெங்கடேசலு, ஆசிரியை மகாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மைய அறங்காவலர் சரவணக்குமார் நன்றி கூறினார்.