Regional03

வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு :

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தல், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் தேர்தல் ஆணையம் தரப்பில் மும்முரமாக நடைபெறுகின்றன.

இதன் ஒரு பகுதியாக மக்க ளவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்கு மறவன்குடியிருப்பு அல்போன்சா பள்ளியிலும், நாகர்கோவில் தொகுதிக்கு ராமன்புதூர் ரெமிஜியூஸ் சி.பி.எஸ்.சி. பள்ளியிலும், குளச்சல் தொகுதிக்கு சுங்காங்கடை சேவியர் கல்லூரியிலும், கிள்ளியூர் தொகுதிக்கு கருங்கல் பெத்லேகம் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை, மாவட்ட தேர்தல் அலுவலர் மா.அரவிந்த் ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி மையங்களில் விதிமுறைப்படி சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT