போடியில் துணை முதல்வர் அலுவலகம் முன் பறக்கும் படை அலுவலர்கள் திடீர் வாகன சோதனை செய்தனர்.
போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவல கம் சுப்புராஜ் நகரில் உள்ளது. அவர் இங்கிருந்து கட்சி மற்றும் தொகுதிப் பணிகளை மேற் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், துணை முதல்வரின் அலுவலகத்துக்கு வெளியாட்கள் அதிகம் வருகின்றனர். பணப் பரிவர்த்தனை நடைபெறலாம். சமூக இடைவெளியின்றி கூட்டம் அதிகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அதிமுக அலுவலகம் அருகே இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் பறக்கும் படையி னர் திடீர் சோதனை நடத்தினர். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. கட்சி அலுவலகத்துக்கு வருவதற் கான காரணங்கள் கேட்கப்பட்டன.
இதனால் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன் திரண்டனர். போலீஸார் அவர்களிடம் இது தேர்தல் நேர வழக்கமான சோதனைதான் என்று சமாதானப்படுத்தி அனுப்பினர்.