Regional03

ஒகேனக்கல் வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

ஒகேனக்கல் வனச்சரக பகுதியில் 5 வயதுடைய ஆண் யானை உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த போடூர் வனப்பகுதியில் ஒகேனக்கல் வனச் சரக எல்லையில் சின்னாற்றின் அருகேயானை ஒன்று உயிரிழந்து கிடப்பது நேற்று தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் வனச் சரகர் சேகர் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்றுஆய்வு செய்தனர். பின்னர், வனத்துறைக்கான கால்நடை மருத்துவர் பிரகாஷ் வரவழைக்கப்பட்டார். அவர், யானையின் உடலை அதே பகுதியில் பிரேத பரிசோதனை செய்தார்.

பின்னர், வனத்துறை விதிகளை பின்பற்றி யானையின் உடல் அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த யானை 5 முதல் 8 வயதுடைய ஆண் யானை. இந்த யானையின் உடலில் சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட 2 தந்தங்கள் மீட்கப்பட்டு வனத்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவால் யானை உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும், யானை உயிரிழப்புக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே முழுமையாக தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT