Regional03

தேர்தல் செலவின பார்வையாளர் திருச்செங்கோட்டில் ஆலோசனை :

செய்திப்பிரிவு

நாமக்கல்: திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் மந்தீப் சிங் பர்மார் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் வேட்பாளர்கள் செய்யும் செலவினங்களை மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி செலவினங்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டும், என்றார்.

உதவி தேர்தல் செலவின பார்வையாளர் மணிஷ், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருமான மணிராஜ், வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT