Regional03

இந்திய கடலோர காவல் படை சார்பில் - மீனவ கிராமங்களில் மக்கள் தொடர்புத் திட்டம் :

செய்திப்பிரிவு

2022-ம் ஆண்டு ஆக.15-ம் தேதிஅன்று நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, மத்திய அரசு இதற்காக, 75 வாரங்கள், விழா கொண்டாட உள்ளது. இதன்படி, இந்திய கடலோர காவல்படையின் கிழக்குப் பிராந்திய அலுவலகம் சார்பில், தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடல்எல்லைப் பகுதிகளை ஒட்டி உள்ள75 கிராமங்களில் சமூகத் தொடர்புதிட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக 20 கடற்கரையோர கிராமங்களில் இத்திட்டம் நடைபெற்றது. மீன்வளத் துறை அதிகாரிகள், கடலோர காவல் படை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது. அப்போது, கடல் எல்லைப் பகுதியில் மீனவர்கள் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும்போது உயிர்காக்கும் கருவிகளை உடன் எடுத்துச் செல்லுவதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. அத்துடன், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது. அத்துடன், மீனவர்களுக்கு மாரத்தான், சைக்கிள் போட்டிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT