சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு 20 ஆண்டுகளுக்கு மேல் சிகிச்சை அளித்துவரும் சாபியன்ஸ் ஹெல்த் ஃபவுண்டேஷன் சார்பில் உலக சிறுநீரக நாள் விழா கொண்டாடப்பட்டது.
'சிறுநீரக நோயுடனும் நன்றாக வாழ்' என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு உலக சிறுநீரக நாள் விழா நடைபெற்றது. சிறுநீரக நோயுடன் இயல்பான வாழ்க்கை வாழ்ந்துவரும் பலர் இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
பல சிறுநீரக நோயாளிகள் தங்களின் அனுபவங்களை பகிரும் ஆவணப்படத்தை திரை இயக்குநர் நிரஞ்சன் உருவாக்கியுள்ளார். அந்த ஆவணப்படம் விழாவின்போது வெளியிடப்பட்டது.
நம்பிக்கை அவசியம்
தனது மைத்துனிக்கு 15 ஆண்டுகளுக்கு முன் சிறுநீரகத்தை தானமாக வழங்கியவர் என்ற முறையில், நாடக நடிகர் மது பாலாஜி,உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அறக்கட்டளை தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்பில் உள்ள ராமச்சந்திரன் என்பவர் கூறும்போது,“29 ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்புஇருந்தபோதும் முழுமையான வாழ்க்கை வாழ முடியும் என்பதற்குநானே சிறந்த உதாரணம்” என்றுகூறினார். முன்னதாக அறங்காவலர் ஆர்.சுந்தர் அனைவரையும் வரவேற்றார்.