Regional03

ராமேசுவரம் கோயிலில் : மகா சிவராத்திரி தேரோட்டம் :

செய்திப்பிரிவு

கோயில் தக்கார் ராஜாகுமரன் சேதுபதி தேர் வடத்தை இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘சிவ சிவ' என்ற கோஷத்துடன் தேரை இழுத்தனர். சுவாமியும், அம்பாளும் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர். தேர் நிலையை அடைந்ததும், பகல் ஒரு மணியளவில் கோயிலின் நடை சாத்தப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT