Regional03

ஐடிஐ மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

செய்திப்பிரிவு

விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். பின்னர், 118 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களையும், 351 மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களையும், 7 மாணவிகளுக்கு சீருடைகளையும் ஆட்சியர் இரா.கண்ணன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஐடிஐ முதல்வர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மாரிமுத்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தா, உதவி இயக்குநர் (பொறுப்பு) மாவட்ட திறன் பயிற்சி சுபாஷ்சந்திரபோஸ், ஊராட்சித் தலைவர்கள் செல்வி(கூரைக்குண்டு), புஷ்பம்(சூலக்கரை), நிலைய மேலாண்மை குழு உறுப்பினர்கள் பிருந்தாவன், முத்து, குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT