Regional03

மன்னார்குடியில் கரோனா பரிசோதனை

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை, இளையோர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் பாதுகாப்பு மையம் இணைந்து நடத்திய கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் டிச.29, 30-ம் தேதிகளில் கல்லூரியில் நடை பெற்றது.

கல்லூரி முதல்வர் அறிவுடை நம்பி தலைமை வகித்தார். இதில், பேராசிரியர்கள், மாணவர் கள் உட்பட 250 பேருக்கு வட்டார மருத்துவ அலுவலர் அபுவத்தமிழன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT