மேட்டூர் கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு நீட்டிப்பு :

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதியில் இருந்தும், கால்வாய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங் களில் உள்ள 45,000 ஏக்கர் பயனடைந்து வருகிறது. தற்போது, அணையில் முழு கொள்ளளவான 120 அடிக்கு நீர் உள்ள நிலையில், கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பு நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பு ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதி காரிகள் கூறும்போது, “அணையில் இன்று (நேற்று) முதல் ஜனவரி 15-ம் தேதி வரை 31 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 600 கனஅடி கால்வாய் பாசனத்துக்கு நீர் திறக்கப்படும்” என்றனர்.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,400 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,600 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 8,000 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு ள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

க்ரைம்

10 mins ago

தமிழகம்

7 mins ago

கல்வி

15 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

மேலும்