கே.பூசாரிப்பட்டி அரசுப் பள்ளியில் அடல் டிங்கர் ஆய்வகம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

கே.பூசாரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அடல் டிங்கர் ஆய்வகத்தை சிஇஓ மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கவும், ஆராய்ச்சித் திறனை ஊக்கப்படுத்தவும் அடல் டிங்கர் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். டிஇஓ., பொன்முடி முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்மகேஸ்வரி, அடல்டிங்கர் ஆய்வகத்தை திறந்து வைத்தார். அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து, மாணவர் களிடம் விளக்கம் கேட்டறிந்தார்.

இதில், அறிவியல் ஆசிரியர் பவுலின் ராணி, மாணவர்கள் சதீஷ், ஜெயபிரகாஷ், விக்ரம், ஹரீஷ் ஆகியோர், ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதரைப்பின்பற்றும் ரோபோவை உருவாக்கியதை செயல்விளக்கத்துடன் கூறினர்.

மேலும் தடைகளை தானே தாண்டி வழிமாற்றிக் கொள்ளும் ரோபோ, மனிதன்கை அசைவை பார்த்து கை அசைக்கும்ரோபோ, ஏதேனும் சிறு அசைவு ஏற்பட்டாலும் புகைப்படம் எடுக்கும் ரோபோ என பல்வேறு வகையான ரோபோக்களை உருவாக்கியிருந்தனர். மேலும் தானியங்கி கார் பார்க்கிங், 3டி பிரிண்டர் மூலம் பொம்மைகள் செய்தல் உட்பட 60-க்கும் மேற்பட்டஅறிவியல் கண்டு பிடிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். மேலும் ஓராண்டிற்குள் தேசிய அளவில் வெற்றி பெறுமளவு முழு ரோபோவையும் உருவாக்குவதே லட்சியமாக உள்ளதாக வழிகாட்டி ஆசிரியர் பவுலின் ராணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சூசைநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ், பிடிஏ தலைவர் குணசேகரன், ஊராட்சித் தலைவர் மஞ்சுளா, முன்னாள் பிடிஏ தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்