Regional02

ராமேசுவரத்தில் : மின்மாற்றி மீது வாகனம் மோதல் :

செய்திப்பிரிவு

ராமேசுவரம் தேசிய நெடுஞ் சாலையில் மீன்களை ஏற்றி வந்த வாகனம் மின் மாற்றி மீது மோதி விபத்துக்குள்ளானது.

ராமேசுவரம் வேர்க்கோடு பகுதியில் நேற்று தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வேக மாக வந்த மீன் வாகனம் மாட்டு வண்டி, இருசக்கர வாகனங்கள் மீது மோதி மின்மாற்றி மீது இடித்து நின்றது. இந்த விபத்தில் அவ்வழியாக பள்ளி சென்ற மாணவர் விக்னேஷ்வரன் (15), கூலித்தொழிலாளி முத்துக் குமார் (44) ஆகியோர் காயம டைந்தனர்.

இதுகுறித்து துறைமுகம் போலீஸார் விசாரணையில் அந்த வாகனத்தை இயக்கி வந்தவர் ராமேசுவரம் மாந்தோப்பு பகுதி யைச் சேர்ந்த காந்தி(17) என் பது தெரியவந்தது. மேலும் வாகனத்தின் உரிமையாளர் சென்னையை சேர்ந்தவர் என்றும், அந்த வாகனத்தை ஒப்பந்த அடிப்படையில் ராமேசு வரத்தை சேர்ந்த மீன் வியாபாரி பாண்டி இயக்கி வருவதும் தெரியவந்தது.

SCROLL FOR NEXT