கோவில்பட்டி: கோவில்பட்டி வட்டம் முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள எஸ்.டி.ஏ. சர்ச் தெருவில் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
`இப்பகுதி மயானத்துககு தேவையான இடமும், பாதையும், தண்ணீர் வசதியும் செய்து கொடுக்க வேண்டும். பெண்களுக்கான கழிப்பறை வசதி, சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல், பேவர் பிளாக் சாலை, குடிநீர் வசதி மற்றும் வாறுகால் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்’ என வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு இப்பகுதி மக்கள் வந்தனர். அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். பின்னர், கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.