நிவாரணம் வழங்க வலியுறுத்தி - சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். தலைவர் சின்னதம்பி, பொருளாளர் மாரியப்பன், துணைச் செயலாளர்கள் பாலன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

‘குறுவை சாகுபடி அறுவடை பணி நடைபெற இருந்த நிலையில், மழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. எனவே, பாதிப்படைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மழை வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். எதிர்வரும் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்களை தட்டுப்பாடின்றி வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

ஜோதிடம்

26 mins ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

சினிமா

8 hours ago

மேலும்