Regional02

ஆற்காட்டில் அதிகபட்ச மழை பதிவு :

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: தமிழகத்தில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் திடீர் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக ஆற்காட்டில் 50.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அரக்கோணத்தில் 20.4, காவேரிப்பாக்கத்தில் 36, வாலாஜாவில் 34.8, அம்மூரில் 18.8, சோளிங்கரில் 1, கலவையில் 5.2 மி.மீ மழை பாதிவாகியுள்ளன. அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக ஆலங்காயத்தில் 10.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆம்பூரில் 4, ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதியில் 4, நாட்றாம்பள்ளியில் 2, வாணியம்பாடியில் 4, திருப்பத்தூரில் 4.8 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

SCROLL FOR NEXT