Regional02

திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் மார்கழித் திருவிழா கொடியேற்றம் :

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவாலய ஓட்டம் நடைபெறும் பன்னிரு சிவாலயங்களில் 2-வது சிவா லயமான திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் மார்கழி திருவிழா நேற்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

திருக்கொடியை தந்திரி வேணுகோபால் ஏற்றி வைத்தார். வரும் 21-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் கணபதி ஹோமம், கலசாபிஷேகம், புஷ்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 16-ம் தேதி நந்தி ஊட்டு பிரதோஷம், 20-ம் தேதி பள்ளிவேட்டை எழுந்தருளல், 21-ம் தேதி தாமிரபரணி படித்துறையில் ஆறாட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. மார்கழி திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் மற்றும் கேரள எல்லை பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT