குறிஞ்சிப்பாடி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். 
Regional02

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிடுக :

செய்திப்பிரிவு

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் ஜெயராமன் தலைமையில் அக்கட்சியினர் வட்டாட்சியர் சையத் அபுதாகீரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பது:

குறிஞ்சிப்பாடி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக நெல், மரவள்ளி, கரும்பு, வாழை போன்ற அனைத்து பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகள் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதாலும், கனமழை காரணமாக மேலும் பாதிக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அரசு இந்தத் தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மாவட்ட குழு உறுப்பினர் சிவகாமி, நகர செயலாளர் மணி உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT