Regional02

கூடலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

செய்திப்பிரிவு

கூடலூர்: கூடலூரில் வரும் 7-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து, வேலைவாய்ப்பற்ற ஆண், பெண், மூன்றாம் பாலின இளைஞர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பு ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது. அந்த வகையில், வரும் 7-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை, கூடலூரிலுள்ள தோட்டத் தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இந்த வாய்ப்பை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 40 வயது வரையிலான படிக்காத மற்றும் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பி.இ. படித்த வேலையில்லா ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT