அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப் பாளர் பதவிகளுக்கான தேர்தல் அட்டவணையை அக்கட்சி வெளியிட்டது.
அதன்படி இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப் புக்கு ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஆகியோர் நேற்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
அவர்கள் இருவரையும் முன் மொழிந்து தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச் சர்கள் உள்ளிட்ட கழகத்தில் பல் வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் தங்களுடைய விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஒருங்கி ணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஒருசேர முன்மொழிந்து புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தனது விருப்ப மனுவை நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக் கல் செய்தார்.