புதுச்சேரி மண்ணாடிப்பட்டு அடுத்ததமிழகப் பகுதியான மூங்கில்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் உதயன் (21). இவர், விழுப்புரத்தில் உள்ளதனியார் கல்லூரியில் பிசிஏ மூன் றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை தனது எதிர் வீட்டைச் சேர்ந்த 5 வயது சிறுவனிடம் கடைக்கு செல் வதாக கூறி, பைக்கில் அழைத்து வந்துள்ளார்.
இதற்கிடையே இரவு உதயன், சிறுவனின் தாயை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மண்ணாடிப்பட்டில் இருந்து திருக்க னூர் செல்லும் சாலையில் சென்ற போது, தனது பைக்கை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து தாக்கி, சிறுவனை ரூ.1 லட்சம் கேட்டு கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் திருக்கனூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். மேற்குப்பகுதி எஸ்பி ரங்கநாதன் மற்றும் போலீஸார் திருக்கனூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் உதயனும் அங்கு வந்து, அவர் களுடன் சிறுவனை தேடினார்.
அப்போது உதயனின் மொபைல்போனை போலீஸார் பறிமுதல் செய்து வைத்திருந்தனர். அந்த போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போலீஸார் எடுத்து பேசியபோது, மறுமுனையில் பெண் ஒருவர் பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து, திருக்க னூர் டி.வி.மலை ரோட்டில் உதயன் நண்பரின் தாய் பழனியம்மாள் வீட்டில் சிறுவன் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீஸார் சிறுவனை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். பழனியம்மாளிடம் நடத் திய விசாரணையில், உதயன் அந்தச் சிறுவனை தனது வீட்டில் விட்டுவிட்டு சென்றதும், சிறுவனை கடத்தியதாக உதயன் நாடகம் ஆடியதும் தெரிய வந்தது.
மேலும் உதயனிடம் நடத்திய விசாரணையில், புதிய செல்போன் ஒன்றை வாங்க ஆசைப்பட்டு, அதற்கு பணம் தேவைப்பட்டதால், சிறுவனை நண்பரின் வீட்டில் விட்டுவிட்டு, 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி ரூ.1 லட்சம் பணம் கேட்பதாக நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து அவரை கைது செய்த திருக்கனூர் போலீஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
புதிய செல்போன் ஒன்றை வாங்க ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நாடகமாடியது அம்பலமானது.