முல்லை பெரியாறு அணையின் நீர் தேக்கப் பகுதியான தேக்கடியில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் தினமும் காலை 7.30 மணி, 9.30, 11.15, 1.45 மற்றும் 3.30 மணி என ஐந்து முறை படகு பயண வசதி உள்ளது. 1.30 மணி நேரம் அணையின் நீர் தேக்கப் பகுதிகளுக்குள் இந்த படகுகள் சென்றுதிரும்பும்.
தற்போது இப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் படகுகளின் போக்கு திசை மாறும் நிலை உள்ளது. எனவே படகு இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.