`போதைபொருள் இல்லாத இந்தியா’ திட்டத்தின் கீழ், கன்னியாகுமரி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, திருப்புமுனை போதைப்பொருள் நலப்பணி ஆகியவை சார்பில், போதை தடுப்பு 5 நாள் பயிற்சி முகாம், நாகர்கோவில் திருச்சிலுவை மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இதன் நிறைவுநாள் நிகழ்ச்சியில், மனநல ஆற்றுப்படுத்துதல் கையேட்டை, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வெளியிட்டு பேசினார். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினி, திருச்சிலுவை கல்லூரி முதல்வர் சோபி, துணை முதல்வர் பீமாரோஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.