வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சுமார் 96 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் 13-வது கட்ட மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்டங்களில் வீடு தோறும் சென்று தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நேற்று 41,904 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 25,342 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 28,747 பேருக்கும் என மொத்தம் 95,993 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாவட்ட அளவில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை), அமர் குஷ்வாஹா (திருப்பத்தூர்) ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.