ராணிப்பேட்டை: தக்கோலம் அருகே தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் நடைபெற்ற கொலையில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் வெங்கட்ராமன் (27) என்பவரை, கூலித்தொழிலாளி எல்லப்பன் கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கின் விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதில், எல்லப்பனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.