புதுச்சேரியில் மழை பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற் கொண்டஆட்சியர் கூறியதாவது:
கனமழையைத் தொடர்ந்து வரும் பல்வேறு புகார்கள் மற்றும் குறைகளை கவனிப்பதற்காக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தண்ணீர் தேங்குதல், மரங்கள் விழுந்தது, மின்கம்பங்கள் சேதம் போன்றவை தொடர்பான 15 புகார்கள் பெறப்பட்டு, சரிசெய்யப்பட்டு வருகின்றன. செல்லம்பாப்பு நகர், ரெயின்போ நகர், சோலை நகர், டி.வி.நகர், கொசபாளையம், பெருமாள் புரம் வில்லியனூர், உத்திரவாகினிப்பேட்டை, கொம்பாக்கம், ஆச்சாரியாபுரம், இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, இசிஆர் சாலையில் உள்ள சிவாஜி சிலை, கல் மண்டபம், ஆரிய பாளையம், பத்துக்கண்ணு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சிகள் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன.
பாகூர் வட்டம் மடுக்கரை மலட்டாற்றில் நீரில் மூழ்கி ஒருவர் இறந் ததைத் தவிர, பொது மக்களுக்கு எந்த உயிரிழப்பும் இல்லை.
இதுவரை 62 குடிசைகள் மற்றும் 27 வீடுகள் சேதமடைந்துள்ளன. 3 இடங்களில் மரங்கள் விழுந்தன. ஈசிஆரில் சிவாஜி சிலையின் அருகே விழுந்த மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் சரி செய்தனர். கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக இதுவரை 194 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. உணவுப் பொட்டலங்கள் வழங்க குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார்.
முதல்வர் பார்வையிட்டார்
இதனிடையே மழையால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளை முதல்வர் ரங்கசாமி பார்வையிட் டார்.
புதுச்சேரியில் நேற்று (நவ 18)காலை 8.30 முதல் இரவு 7 மணி வரை 151 மிமீ மழை பெய்துள்ளது.
மூதாட்டி மீட்பு