Regional02

இளையான்குடி அருகே விவசாயிகள் போராட்டம் :

செய்திப்பிரிவு

இளையான்குடி அருகே கூட்டுறவு சங்கத்தில் விதிமீறி பணம் பிடித்தம் செய்ததற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இளையான்குடி அருகே கோட்டையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கோட்டையூர், தெற்கு கோட்டையூர், வாணி, வலையனேந்தல், தெற்கு கீரனூர், கல்வெளி பொட்டல், சிறுபாலை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த ஆண்டு பயிர்க் கடன் வழங்கியபோது, விவசாயிகளிடம் அவர்களது பங்குத்தொகையாக 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை விவசாயிகள் கணக்கு புத்தகத்திலோ, கடன் அட்டையிலோ வரவு வைக்கவில்லை. தற்போது மீண்டும் பயிர்க்கடன் பெறும் விவசாயிகளிடம் 10 சதவீதம் பங்குத் தொகை பிடித்தம் செய்கின்றனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து சங்கம் முன்பாக போராட்டம் செய்தனர். இது குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘பிடித்த பங்குத் தொகையை விவசாயிகள் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

SCROLL FOR NEXT