Regional02

தென்பெண்ணை ஆறு கரையோரமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை :

செய்திப்பிரிவு

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. தற்போதுஅணையின் நீர்மட்டம் 41.98 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1055 கனஅடி நீர் வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து விநாடிக்கு 988 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக தண்டோரா போடப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும், ஆற்றைக் கடந்து செல்லவும் முயற்சி செய்யக்கூடாது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT