இந்நிலையில், மனோஜ்குமார் பெருங்களத்தூர் சென்றுவிட்டு மனைவியுடன் நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பூந்தமல்லி- அரக்கோணம் நெடுஞ்சாலையில், கூவம் பகுதியில் கார் சென்றுக் கொண்டிருந்த போது, எதிர் திசையில் வந்த கான்கிரீட் கலவை டேங்கர் லாரி, கார் மீது மோதியது. இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த மப்பேடு போலீஸார், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.