ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - 7,230 பேர் உள்ளாட்சி பிரதிநிதிகளாக பதவியேற்பு :

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 7,230 பேர் உள்ளாட்சி பிரதிநிதிகளாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்கள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இம்மாதம் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில், வேலூர், கணியம்பாடி, காட்பாடி, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய 7 ஒன்றியங்களில் 14 மாவட்ட கவுன்சிலர்கள், 138 ஒன்றிய கவுன்சிலர்கள், 247 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 2,079 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 2,478 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், 316 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 2,151 பேர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அவர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்டத்தில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் 14 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல, 7 ஒன்றிய அலுவலகங்களில் ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றிபெற்றவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

கிராம ஊராட்சி அலுவலகங்களில் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் பதவி ஏற்றனர். அவர்களை தொடர்ந்து, அந்தந்த ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 ஒன்றியங்களில் வெற்றிபெற்றவர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட கவுன்சிலர்களாக வெற்றி பெற்ற 13 பேருக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா முன்னிலையில் 13 மாவட்ட கவுன்சிலர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல, 6 ஒன்றிய அலுவலகங்களில் 124 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர். 208 ஊராட்சிகளில் நாயக்கநேரி ஊராட்சியை தவிர்த்து 207 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் 207 ஊராட்சி மன்ற தலைவர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களை தொடர்ந்து, 1,770 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா, ஆற்காடு, திமிரி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம், நெமிலி ஆகிய 7 ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் 13 மாவட்ட கவுன்சிலர்கள், 127 ஒன்றிய கவுன்சிலர்கள், 288 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 2,220 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடை பெற்றது. இதில், வெற்றி பெற்ற வர்களுக்கான பதவியேற்பு விழா ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.

சிப்காட் பாரதிநகரில் உள்ள தனியார் இடத்தில் 13 மாவட்ட கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில், 13 மாவட்ட கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். 7 ஒன்றிய அலுவலகங்களில் அந்தந்த ஒன்றியங்களில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், சுயேட்சை கவுன்சிலர்கள் தேர்தல்நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில், ஊராட்சி மன்ற தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஊராட்சி மன்றத்தலைவராக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களை தொடர்ந்து, ஊராட்சி வார்டுஉறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். உள்ளாட்சி பிரதிநிதிகளாக பதவி ஏற்றுக்கொண்டவர் களுக்கு ஊரக உள்ளாட்சி அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று முடிவடைந்ததையொட்டி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழுத்தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நாளை (22-ம் தேதி) நடைபெற உள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிக்குழுவை திமுகவினர் கைப்பற்றியுள்ளதால், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர், துணைத்தலைவர், அதேபோல ஒன்றியக்குழுத்தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான வேட் பாளர்களை கட்சி தலைமை அறிவித்து அதற்கான பட்டியலை இன்று வெளியிடும் என தெரிகிறது.

கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு மட்டும் யாரை தேர்வு செய்ய வேண்டும் என அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஊராட்சி வார்டு உறுப்பினர்களிடம் தெரி வித்துள்ளதாக கூறப்படுகிறது.

பதவியேற்பு நிகழ்ச்சியால் வேலூர், காட்பாடி, குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர், வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்