இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையில், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் இன்று (16-ம் தேதி) இலவச கருத்தரங்கு நடைபெற உள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் லிம்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
2021-ம் ஆண்டில் 1,12,889 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். தமிழக அரசின் 26 மருத்துவக் கல்லூரிகளிலும். எம்.பி.பி.எஸ் இடங்கள் எண்ணிக்கை 3650. இதில் பிற ஒதுக்கீடுகளுக்கு போக 2714 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு நீட் கட்ஆப் மதிப்பெண் 40 முதல் 70 வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் மருத்துவம் படிக்க இடம் கிடைப்பது கேள்விக் குறியாகியுள்ளது.
எங்களது நிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல் பட்டு வரும் தவோ மற்றும் ப்ரோகேன்ஷயர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் அதிகார பூர்வ தென்னிந்திய பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 1200-க்கும் மேற்பட்ட மருத்துவர்களை உருவாக்கிஉள்ளது. இப்பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும், எப்எம்ஜி எனப்படும் தகுதி நிர்ணயத் தேர்விற்கான பயிற்சியை, லிம்ரா நிறுவனத்தின் பயிற்சி பிரிவான லைம் நிறுவனத்துடன் இணைந்து கட்டணமின்றி வழங்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற எப்எம்ஜி தேர்வில் 150 இளம் மருத்துவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தற்போது நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், நீட்தேர்வு எழுதாமல் இருந்தாலும், நிகழாண்டில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.
எப்எம்ஜி தகுதித் தேர்வு குறித்து விவரம் உள்ளிட்டவை குறித்து மாணவர்கள், பெற்றோர்களுக்கு எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், இலவச கருத்தரங்கு இன்று (16-ம் தேதி) காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஆர்.கே.வி ஹாலிலும், மாலை 4.30 மணிக்கு தருமபுரியில் சேலம் சாலையில் உள்ள ஓட்டல் ராமாவிலும் நடைபெறுகிறது. மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 99529 22333, 94457 83333 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago