திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக காந்திநகரில் உள்ள 200 வீடுகளை தத்தெடுத்து, திடக்கழிவு மேலாண்மை பணியை தொடங்கி வைத்தார். குப்பையை பிரிப்பது தொடர்பான விழிப்புணர்வு அளித்து, அந்த பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பையை 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் தியாகி பழனிசாமி நகரில் 200 வீடுகளில் முதல்கட்டமாக திடக்கழிவு மேலாண்மைப் பணி தொடங்கப்பட்டது. பொதுமக்கள் குப்பை சேகரிக்கும் வகையில் சிறிய அளவில் பிளாஸ்டிக் தொட்டிகள் வழங்கப்பட்டன. குப்பையில்லா மாநகராட்சியாக திருப்பூரை மாற்ற மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.