தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன் தினம் இரவு மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மாரண்ட அள்ளி பகுதியில் 44 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இதுதவிர, பாலக்கோடு பகுதியில் 23.20 மி.மீட்டர் மழையும், ஒகேனக்கல் பகுதியில் 22 மி.மீட்டர் மழையும், அரூர் பகுதியில் 19 மி.மீட்டர் மழையும், பென்னா கரம் பகுதியில் 13 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.