திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக - ஆண்டியப்பனூர் அணை 7-வது முறையாக நிரம்பியது : மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை கொட்டித் தீர்த்த கனமழையால் ஆண்டியப்பனூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில், காட்பாடி, மேல் ஆலத்தூர், பொன்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. திருப்பத்தூர் மாவட் டத்தில் ஆலங்காயம், ஆம்பூர், வடபுதுப்பட்டு, வாணியம்பாடி உள் ளிட்ட பகுதிகளிலும், ஜவ்வாது மலை தொடரில் கனமழை கொட்டியது.

ஜவ்வாது மலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் காட்டாற்று வெள்ளம் ஆண்டியப்பனூர் அணைக்கு வந்துக்கொண்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை விடாமல் பெய்த கன மழையால் ஆண்டியப்பனூர் அணை நேற்று முன்தினம் நள் ளிரவு 11.25 மணியளவில் முழு கொள்ளளவை எட்டி 7-வது முறையாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணையின் மொத்த கொள்ளளவு 112.200 மில்லியன் கன அடியாகும். 8 மீட்டர் உயரம் கொண்டதாகும். தொடர் மழை யால் அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது. விநாடிக்கு 123.88 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அதே அளவில் தண்ணீர் வெளி யேற்றப் பட்டு வருகிறது. அணை நிரம்பி அதிலிருந்து வெளியேறி வரும் தண்ணீர் அருகேயுள்ள மடவாளம் ஏரி, செலந்தம்பள்ளி ஏரி, எகிலேரி வழியாக பாம்பாற்றுக்கு சென்றுக்கொண்டிருக்கிறது.

அணை நிரம்பியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆண்டியப்பனூர் அணை பகுதிக்கு நேற்று சென்று நீர் நிலையை ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் குமார் மற்றும் அதிகாரிகள் உடனி ருந்தனர்.

அதேபோல, வாணியம்பாடி, கொடையாஞ்சி, ஆவாரங்குப்பம், ஆம்பூர், மாதனூர், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ இளை ஞர்கள், சிறுவர்கள் என யாரும் பாலாற்றுப் பகுதிக்கு வரவேண்டாம் என உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8 மணி நில வரப்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்:

வேலூர் மாவட்டம்: குடியாத்தம் 19.60 மி.மீ., காட்பாடி 40.20, மேல் ஆலத்தூர் 59.20, பொன்னை 15.80, வேலூர் 9.60, வடபுதுப்பட்டு 1.40, என மொத்தம் 145.80 மழையளவு பதிவாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்: ஆலங்காயம் 38 மி.மீ., ஆம்பூர் 19.40, வடபுதுப்பட்டு 17.60, நாட்றாம்பள்ளி 4.20, கேத்தாண்டப்பட்டி 5, வாணியம்பாடி 24, திருப்பத்தூர் 6.30, என மொத்தம் 145.80 மழை யளவு பதிவானது.

ராணிப்பேட்டை மாவட்டம்: வாலாஜா 11.1 மி.மீ., ஆற்காடு 3, மழையளவு பதிவாகியிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்